தூத்துக்குடியில் கேரளா அருட்சகோதரிகள் கைது குறித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி:
சத்தீஸ்கர் மாநிலத்தில், கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் வந்தனா பிரான்சிஸ், ப்ரீத்தி மேரி ஆகியோர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, தூத்துக்குடியில் கடும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், தூத்துக்குடி மறைமாவட்டம், கிறித்துவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் திரு இருதய நண்பர்கள் இயக்கத்தின் சார்பில், வி.டி. சிக்னல் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கண்டன கோஷங்கள்:
பொய்வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், கிறித்துவர்களின் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தக் கோரியும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் உறுதியான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இயக்க தலைவர் தங்கையா தலைமையிலான இந்த நிகழ்ச்சியில், இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அருட்பணியாளர் பெஞ்சமின் டி. சோசா, மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு ச.தே.செல்வராசு ஆகியோர் உரையாற்றினர்.
பங்கேற்பாளர்கள்:
பேராசிரியர் பாத்திமா பாபு, ஜான் பி. ராயன், நக்கீரன், பெனடிக்ட், ஜெரால்டு அருட்பணியாளர்கள் அருமைநாதன், சில்வஸ்டர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இயக்கப் பொறுப்பாளர்கள் பாஸ்கர் சில்வா, ராஜ்குமார், பிரான்சிஸ் கார்டோசா, ஜாக்குலின் மேரி, ரோஸ்மேரி நிர்மலா ஆகியோரும் இருந்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக