Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி சிறு தொழில்கள் சங்கம் சார்பில், "தூத்துக்குடி தொழில்துறை கண்காட்சி 2025" கடந்த ஆகஸ்ட் 8,9,10, மூன்று நாட்களாக நடைபெறுகிறது இன்றும் (ஆகஸ்ட் 9) ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு அரசு தொழில், முதலீட்டுத் தூண்டுதல் மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் . வி. அருண் ராய், ஐ.ஏ.எஸ்., வ.ஒ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோஹித், IRSEE., மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் மாணேஜிங் டைரக்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாலீ எஸ். நாயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பார்வையிடுகிறார் கள்.
கண்காட்சியில் பல்வேறு தொழில்துறை தயாரிப்புகள், நவீன இயந்திரங்கள், சிறு மற்றும் நுண் தொழில்களின் கண்டுபிடிப்புகள் கவனத்தை ஈர்த்தன. தொழில்முனைவோர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள், வங்கிப் பயன்கள் மற்றும் வணிக வளர்ச்சி குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இளைஞர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது!!!
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இந்நிகழ்ச்சி நடை பெறுவதாக முன்னறிவிப்பு விளம்பரங்கள் பதாகை மற்றும் முன்னனி நாளிதழ்களில் போதிய விளம்பரம் வரவில்லை ஆகவே இந்நிகழ்ச்சி மூன்று நாட்களாக நடைபெற்று வருவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு போதிய அளவில் தெரியவில்லை ஆதங்கப்பட்டார்கள்.
மேலும் நுழைவு வாயில் பாதுகாப்பு பணி எனும் பெயரில் பாதுகாவலர்கள் அதிகம் உள்ளே வருபவர்களுக்கு ஜெர்க் தந்து கொண்டிருந்தார்கள்.
தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் பேச கூடாதா??? வீடியோ பார்க்க
தூத்துக்குடியில் சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு இந்நிகழ்ச்சி முக்கிய பங்காற்றும் என ஏற்பாட்டாளர்கள் துடிசியா தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக