வியாழன், 7 ஆகஸ்ட், 2025

இலவசமாக முதியோர்களுக்கு ஆன்மீக பயணம் தமிழக அரசு வழங்கிறது இதுபற்றி முழு விவரங்கள்

Tamil Nadu updates photo news by Arunan journalist 


📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்
🗓️ செய்தி தேதி: 07.08.2025

முதுமை பெறும் பக்தர்களுக்காக: கட்டணமில்லா அறுபடைவீடு தரிசன பயணம்

செப்.15 விண்ணப்பிக்க கடைசி நாள்!

சென்னை: 2025–26 நிதியாண்டுக்கான தமிழக சட்டப்பேரவை அறிவிப்பினை அமல்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையின் வழிகாட்டுதலின்படி, முருகப்பெருமானின் அறுபடைவீடுகளுக்கு முதியோர்களுக்கான ஆன்மிகப் பயணம் கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

thoothukudileaks


திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகிய அறுபடைவீடுகளுக்கு ஒரே பயணத்திலேயே பக்தர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

🧓 பயணத்திற்கு தகுதி:

  • வயது 60-70க்குள் இருக்க வேண்டும்
  • ஆண்டுவருமானம் ரூ.2 லட்சத்தை மீறக்கூடாது
  • வருமானச் சான்றிதழ் (வட்டாட்சியர் வழங்கிய), உடல்நலத்திற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் கட்டாயம்
  • இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்

📥 விண்ணப்ப முறைகள்:

  • www.hrce.tn.gov.in (இதில் நன்றாக அழுத்தம் செய்க) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்
  • அல்லது மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்.15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

தமிழ் கடவுள் முருகனின் அருள் பெற இந்நிகரற்ற வாய்ப்பை இழக்காதீர்கள்!


📸  “ஆன்மிக பயணத்திற்கான மூத்த குடிமக்கள் தரிசனம்” 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக