Tamil Nadu updates,
photo news by Arunan journalist
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மாற்றிய நாயகர் கலைஞருக்கு வீரவணக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தமிழ்நாட்டின் சிற்பி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனடையோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
கலைஞர் உருவப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் பேர்சில், மாவட்ட துணைத் தலைவர் ஐசக், மாவட்ட துணைச் செயலாளர் ஜான்சன், சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் ஜேம்ஸ் ஆழ்வார், ஒன்றிய பொறுப்பாளர் செம்பூர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் செல்வசிங், சாத்தான்குளம் பொறுப்பாளர்கள் மாடசாமி, தங்கத்துரை உள்ளிட்ட சங்கத்தினர் பங்கேற்று, கலைஞரின் பணிகளை நினைவு கூர்ந்தனர்.
நிகழ்வின் போது, 19/8/2008 அன்று ஒரே நாளில் ஒன்பது அரசு உத்தரவுகளை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக வழங்கிய நிகழ்வு குறிப்பிட்டுக்கூறப்பட்டது.
அன்று மட்டுமல்லாது, "ஊனமுற்றோர்" என்ற சொல்லை மாற்றி, “மாற்றுத்திறனாளிகள்” என்று அழைக்க வலியுறுத்திய மறுமலர்ச்சி புரட்சி நாயகனாக கலைஞர் பாராட்டப்பட்டார்.
பல விஷயங்களில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றிய அவருக்கு சங்கத்தினர் நெஞ்சமெங்கும் நிறைந்த நன்றி தெரிவித்தனர்.
முற்றிலும் சமூகநீதி சார்ந்த ஆட்சியாளராக இருந்த தலைவர் கலைஞருக்கு நிகழ்வில் "புகழ் வணக்கம்" செலுத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக