வியாழன், 7 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் – அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மரியாதை விழா

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 


தூத்துக்குடி, ஆகஸ்ட் 7:

முன்னாள் முதலமைச்சரும் தமிழ்த்தென்றலுமான கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற்று மரியாதை செலுத்தும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன்  ஆகியோர் முன்னிலையில்..

அமைதி ஊர்வலம் 


 ஊர்வலம் அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு, கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட படத்துடன் நான்காம் கேட் – குறிஞ்சிநகர் வழியாக எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை சென்றடைந்தது.

thoothukudileaks
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது ...


அங்கு கலைஞர் சிலைக்கும், அவரது படத்திற்கும் அமைச்சரும் மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆனந்தசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்டம் மற்றும் நகர திமுகவின் அனைத்து அணி, பிரிவு, பகுதி, வட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதிமுக 

மேலும், மதிமுக சார்பாக பேச்சிராஜ், மகாராஜன், மாரிமுத்து, பொன்ராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் மருதபெருமாள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks


சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் ...

thoothukudileaks
 போல் பேட்டை தொண்டர் அணி துறை அமைப்பாளர் அன்பு மற்றும் கவுன்சிலர் நாகேஸ்வரி மலர் தூவி மரியாதை செலுத்திய போது 

கலைஞரின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் வைக்கப்பட்டு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக