51-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம்
தூத்துக்குடி செய்தியாளர்களின் தந்தை ஆ.தங்கமணி நினைவாக அன்பளிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர் ரேகாவின் மாமனாருமான ஆ.தங்கமணி 51-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வை அவரது மகள் மல்லிகா, மகன் கனகராஜ், மகள் ஜெயலெட்சுமி, மருமகன்கள் மாசிலாமணி, அஜய்கோஷ் மற்றும் மருமகள்கள் இலங்கைரதி, பிரேமா, ஹேமா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அன்றைய தினம் சுமார் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆ.தங்கமணி குடும்பத்தினர் அனைவரும் – மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்டோர் – பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக