செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் குளங்கள் உருவாக்க போவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிப்பு தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 


தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் குளங்கள் உருவாக்க போவதாக மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர் இடம் தெரிவித்தார்.

 

thoothukudileaks

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது 

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தூத்துக்குடியில் புதிய தாக இரண்டு குளங்கள் உருவாக்க போவதாக தெரிவித்த  மேயர் ஜெகன் அதற்காக ....

(6-8-2025)இன்று ஸ்பெக்ட்ரம் பூங்கா அருகிலும் மச்சாடோ நகர் பகுதி இவை இரண்டிலும் இன்று ஆய்வு செய்து வந்ததாகவும் தெரிவித்தார்

 

முழு விவரம் வீடியோ  மேலே அழுத்தி பார்க்க 

thoothukudileaks

thoothukudileaks


அந்த வகையில், இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் பி.எம். லால் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். இம்முகாமில் பொதுமக்கள் நேரில் வந்து, பெயர் மாற்றம், வரி விதிப்பு, சான்றிதழ் மாற்றம் உள்ளிட்ட தங்களுடைய பிரச்சனைகளை மனு வழியாக அளித்தனர்.

மனுக்கள் பெற்றதும், அதற்கான உடனடி தீர்வுகளை வழங்க அதிகாரிகளுக்கு மேயர் மற்றும் ஆணையர் அறிவுரை வழங்கினர். பொதுமக்கள் மனுக்களை நேரில் பெற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, தங்களுடைய குறைகளை நேரில் கேட்டுக்கொண்டு, மக்கள் நலனில் மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக செயல்படுவதாக தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக