ஞாயிறு, 13 ஜூலை, 2025

தூத்துக்குடி பகுதி -2 திம்மராஜபுரத்தில் சான்றிதழ் வழங்கும் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி நகரத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வரும் இந்நேரத்தில், முக்கியமான கிராமமான திம்மராஜபுரத்தில் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவை பெறுவதில் கடுமையான தேக்கம் நிலவுகிறது.



 கடந்த 12 நாட்களாக சான்றிதழ்கள் வழங்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பட்டா பெயர் மாற்றம், கல்வி சேர்க்கை, திருமண பதிவு உள்ளிட்ட பல நிர்வாக தேவைகளுக்காக இந்த சான்றிதழ்கள் அவசியமாக தேவைப்படும் நிலையில், வாரந்தோறும் வரிசையில் காத்திருந்து திரும்பி செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணமாக, தற்போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் இல்லாதவையால் சான்றிதழ் செயலாக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 இந்நிலையை களைவதற்காக, மாவட்ட நிர்வாகம் திம்மராஜபுரம் தூத்துக்குடி பகுதி -2 போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இரண்டு தனித்தனி கிராம நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக