தூத்துக்குடி VMS நகர் மின் பிரச்சனைக்கு முடிவுக்கொண்டு வந்த அமைச்சர்!
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு, தெற்கு VMS நகர் பகுதியில் நீண்ட காலமாக இருந்த மின் விநியோக சிக்கல்களை தீர்ப்பதற்காக, அமைச்சர் பி. கீதா ஜீவன் நேரடி முயற்சியால் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று 13-5-2025 தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், இளைஞர் அணி செயலாளர் அருண் சுந்தர், வட்ட செயலாளர் காளி துரை, வட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சந்தனராஜ், இன்பசேகர், மோகன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். மேலும் மின்சாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்று, இந்த நடவடிக்கையை வரவேற்றனர்.
புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பின் மூலம் தற்போது வரை சந்தித்த மின் தடை, ஒளிச்சேதம் உள்ளிட்ட சிக்கல்கள் முடிவுக்கு வருவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
– தூத்துக்குடி லீக்ஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக