Tamil Nadu updates, photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் - நாளிதழ் செய்தி
தனசேகரன் நகர், 13 மே 2025
தூத்துக்குடியில் மாவட்ட நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா: கனிமொழி தலைமையில் தொடக்கவிழா
தூத்துக்குடி மாநகராட்சியின் கீழ் புதிய மாவட்ட நூலக கட்டிடப் பணிகள் இன்று தனசேகரன் நகரில் பிரம்மாண்டமாக தொடங்கின.
இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களின் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் முன்னிலை வகிக்க, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் . அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் (இ.ஆ.ப.), ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர் . லி. மதுபாலன் (இ.ஆ.ப.), துணை மேயர் செ. ஜெனிட்டா, வடக்கு மண்டலத் தலைவர் . தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் செ. ஜாக்குலின் ஜெயா ஆகியோரும் பங்கேற்றனர்.
மாவட்ட வாசகர்களின் அறிவு வளத்தை மேம்படுத்தும் வகையில், நவீன வசதிகள் போட்டி தேர்வுக்கான வசதி குழந்தைகள் மகளிர் நலம் உள்ளடக்கம் நூலகம் உருவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “இது ஒரு புதிய யுகத்தைத் தொடக்குகிறது” என பொதுமக்கள் உற்சாகம் தெரிவித்தனர்.
Thuthukudi Leaks சுடச்சுட செய்திகளைத் தொடர்ந்து அறிய, எங்களுடன் தொடருங்கள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக