வியாழன், 15 மே, 2025

மக்கள் தீர்ப்பை மதிக்க மறுக்கும் அரசா? ஸ்டெர்லைட் தியாகிகளின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு உறவுகளைத் திரட்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு

Tamil Nadu updates photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் - செய்தி
வெளியீடு: மே 16, 2025


மக்கள் தீர்ப்பை மதிக்க மறுக்கும் அரசா?
ஸ்டெர்லைட் தியாகிகளின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு உறவுகளைத் திரட்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு

தூத்துக்குடி:
2018ம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உயிரிழந்த 13 போராளிகள், தமிழக வரலாற்றில் மக்களுக்காக உயிர்துறந்த தியாகிகளாக இன்றும் நினைவுகூரப்படுகின்றனர். அவர்களது 7வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழியாக மாநில அரசுக்கு தீவிர வலியுறுத்தல் முன்வைக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 29, 2024 அன்று இந்திய உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசின் முடிவை உறுதி செய்தது. ஆனால் ஒரு வருடம் கடந்தும், தமிழக அரசு ஆலையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதிக்கிறது. இதனை தவறாகப் பயன்படுத்தி, ஸ்டெர்லைட் நிர்வாகம் தற்போது ‘க்யூரேட்டிவ் மனு’ எனும் வழியாக மீண்டும் ஆலையை திறக்க முயற்சி செய்யும் நிலையில் உள்ளது.

“தீர்ப்பு வந்து ஓராண்டு மேலாச்சி, ஸ்டெர்லைட்டை அகற்ற தயக்கம் ஏன்?” என்பது மக்கள் கூட்டமைப்பின் முக்கியக் கேள்வியாகக் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.


இந்நிலையில், மே 22 நினைவு நாளை முன்னிட்டு, மக்கள் ஒற்றுமையையும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் அகற்றக் கோரும் லோகோவை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த லோகோ வை வாட்ஸ் அப் ல ஸ்டேட்ஸ் வையுங்கள் 


“மாநில அரசு உருக்கமான நடவடிக்கைகளை எடுத்து, ஆலையை முழுமையாக அகற்ற வேண்டியது அவசியம். அப்போதுதான், தூத்துக்குடியில் நிரந்தர நிம்மதியும் நம்பிக்கையும் மலரும்” என கூட்டமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.


தூத்துக்குடி லீக்ஸ்
மக்களின் குரல். நியாயத்தின் வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக