Tamil Nadu updates,
தூத்துக்குடி நகரம் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவத்தால் பரபரப்பாகியுள்ளது.
கடந்த வாரம் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்ட லம் அலுவலகம் முன்பாக
ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியின் வாகனம், சிலர் கும்பலாக முற்றுகையிட்டு வழிமறித்ததுடன், அவரிடம் ஆவேசமாக பேசி, அவரது உதவியாளர் கருணாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தூத்துக்குடி வடபகுதி காவல்நிலையத்தில் கீழ்காணும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது:
Cr.No.346/25 – BNS Sec: 126(2), 296(b), 115(2), 351(2)
அதற்கு பிறகும், முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான ... கைது செய்யப்பட வேண்டிய
கிறிஸ்தவ குருவானவர்கள்
டேவிட் ராஜ், லிவிங்ஸ்டன், ராபின் ஜெயபிரகாஷ், கேரிஸ் நான்கு பேர் உள்ளிட்ட 15 பேர்கள் காவல்துறையின் அச்சமின்றி ஊடக சந்திப்புகள் நடத்தி, பொதுவெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.
"சாதாரண பொதுமக்கள் இதுபோல் நடந்திருந்தால், போலீசார் இவ்வளவு மெதுவாக நடந்திருப்பார்களா? என்கிற கேள்வி பொதுமக்களில் எழுகிறது."
இதற்கிடையில், சட்டமன்றத்தில் நம்ம தந்தைக்கு முன்னதாக அமர்ந்து இருக்கும் "ராதாபுரம் புள்ளி" என அழைக்கப்படும் ஒருவரின் செல்வாக்கு சம்பந்தப்பட்டோருக்கு துணைபோவதாக கூறப்படுகிறது.
விமர்சனம்!!!
இது, காவல்துறை நடவடிக்கையைத் தடுக்கும் பாணியில்தான் இருக்கிறது என்றெல்லாம் விமர்சனம் எழுகிறது.
கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான எண்ணங்கள்!!
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் புள்ளி யின் ஒருதலைப்பட்சமான இத்தகைய செயல் பாடு கிறிஸ்தவ வாக்காளர்களின் மனதில் ஆளும் கட்சிக்கு எதிரான எண்ணங்களை விதைக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.
சட்டமும் ஒழுங்கும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இருக்கிறது.
ஆனால், சில கருப்பு ஆடுகள், உண்மையான தகவல்கள் முதல்வருக்கு செல்லாமல் தடுக்கின்றனவா? என்பது தற்போது எழும் முக்கிய சந்தேகம்.
Thoothukudi Leaks தொடரும்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக