Tamil Nadu updates
தூத்துக்குடி, மே 21:
தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவக்கி வைத்தார்.
அன்னதானம்!!!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39-வது வட்டக் கழக செயலாளருமான பி. திருச்சிற்றம்பலம், ஒயிட்ரோஸ் ரெக்ரிசேஷன் கிளப் சங்கத் தலைவர் வழக்கறிஞர் குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் டைகர் சிவா ஆகியோரின் ஏற்பாட்டில் சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் சுமார் 4,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு பூஜை!!!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இந்த அன்னதான நிகழ்வை துவக்கி வைத்தார். முன்னதாக, முத்தாரம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கலந்து கொண்டோர் விவரம்!!!
இந்நிகழ்வில் மாவட்டக் கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக்டர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், மாவட்ட அஜித் ரசிகர் மன்ற பொருளாளர் சந்தனராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதிமுக நிர்வாகிகள் மனுவேல்ராஜ், சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, சொக்கலிங்கம், நவ்ஷாத், ஜான்சன் தேவராஜ், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், பழனி, திலகர், யுவன் பாலா, சகாயராஜா, ஆனந்த், சிதம்பர ராஜா, சுப்பிரமணி மற்றும் தொழிலதிபர்கள் செந்தில் ஆறுமுகம், டி.ஏ. தெய்வநாயகம், திமுக நிர்வாகி மாரிமுத்து, பொன் லட்சுமணன், சாம்ராஜ் சங்கரப்பேரி சக்தி, முனியப்பன், மைதீன் உட்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக