தூத்துக்குடி லீக்ஸ் - நாளிதழ் செய்தி
Tamil Nadu updates, photo news
by Arunan journalist
முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்த கனிமொழி எம்பி
தூத்துக்குடி, மே 14:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு முடிவுற்ற கட்டுமானங்களை இன்று (புதன்கிழமை) மக்களிடம் கையளித்தார்.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.
திரேஸ்புரத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், அண்ணா திருமண மண்டபம் அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, ஜார்ஜ் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடை, லெவிஞ்சிபுரத்தில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, குரூஸ்புரத்தில் எம்.எம்.அப்துல்லா எம்பி நிதியிலிருந்து உருவான அங்கன்வாடி மையம், அமுதாநகரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் நியாய விலைக் கடை ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
![]() |
| ஸ்டெம் பூங்கா |
முன்னதாக, அம்பேத்கர் நகரில் உள்ள ஸ்டெம்ப் பார்க் பகுதியில், விடுமுறை தினத்தையொட்டி சிறுவர்களுக்காக நடைபெற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளை எம்பி கனிமொழி பார்வையிட்டு, குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் .மதுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக