சனி, 21 டிசம்பர், 2024

அமித்ஷா மீது கண்டனம்: தூத்துக்குடி யில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tamil Nadu updates,

22-12-2024

அமித்ஷா மீது கண்டனம்: தூத்துக்குடி யில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 




தூத்துக்குடி: இந்திய அரசியலின் தலைசிறந்த புரட்சியாளர் மற்றும் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி நீக்கப்பட வேண்டும், மேலும் அவர் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி 12 வது வாசல் மையவாடி எதிராக உள்ள மைதானத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தலைமை:

H.M. அகமது இக்பால், மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி.


முன்னிலை:

அஸ்மத் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி),

யூசுப் (மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்).




கண்டன உரை:

ஞானசேகர் (மாநில பொதுக்குழு உறுப்பினர், CPI),

மாடசாமி (மாவட்ட அலுவலக செயலாளர், CPI),

முருகபூபதி (மாநகர செயலாளர், மதிமுக),

நக்கீரன் (மாநில வெளியீட்டு அணி செயலாளர், மதிமுக),

சுந்தரி மைந்தன் (மாநில ஒருங்கிணைப்பாளர், கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம்),

சு.கா.சங்கர் (நிதி செயலாளர், திராவிடர் தமிழர் கட்சி),

முருகன் (மாவட்ட பொறுப்பாளர், CPIML),

ஜான் பி. ராயர் (மாவட்ட பொறுப்பாளர், சமம் குடிமக்கள் இயக்கம்).


கலந்துகொண்டவர்கள்:

மாநில, மாவட்ட, நகர, மற்றும் கிளை நிர்வாகிகள்,

மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மற்றும் தோழமை கட்சிகளின் பல தலைவர்களும் உறுப்பினர்களும்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு, அமித்ஷாவை பதவி நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக