கோவில்பட்டி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குமீண்டான்பட்டி பகுதியில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவின் பேரில், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் . ஜெகன்நாதன் மேற்பார்வையில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமையில், சார்பு ஆய்வாளர் செல்லதுரை மற்றும் போலீசார் இணைந்து இதை செயல்படுத்தினர்.
சம்பவம்
வாகன தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், நாலாட்டின்புதூர் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (25) மற்றும் முடுக்குமீண்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த முகேஷ்குமார் (24) ஆகியோர், விற்பனைக்காக 1 கிலோ 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
பறிமுதல்
போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக