Tamil Nadu updates,
21-12-2024
Photo news by Arunan journalist
தூத்துக்குடி, டிசம்பர் 21:
பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில், தூத்துக்குடி நகரில் வீடு இன்றி சாலையோரங்களில் உறங்கி வந்த அப்பாவி பொதுமக்களுக்கு போர்வைகள் மற்றும் உணவு பொட்டலங்கள் நேற்று இரவு வழங்கி னார்கள்.
இந்நிகழ்ச்சி வேம்படி மாரியம்மன் கோயில் அருகில் இரவு 9.45 மணிக்கு தொடங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அவர் சாலையோரமாக உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, அவர்களுக்கு போர்வை மற்றும் உணவு பொட்டலங்களை தனது கரங்களால் வழங்கினார்.
இந்த மனிதாபிமான நடவடிக்கை நிகழ்ச்சியில் பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்டின் சேவையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக