வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இது தான் பாஜக!!! முன்னாள் முதல்வர் கருணாநிதி 100 ரூபாய் நாணயம் மத்திய அரசு வெளீயீடு இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைப்போம் இதுதான் பாஜகவின் அரசியல் பாதை

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-8-2024 photo news 

by Arunan journalist 

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார் 


அதில் கூறியுள்ளதாவது 



நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைப்போம்  இதுதான் பாஜகவின் அரசியல் பாதை


1980-ம் ஆண்டு  பாஜக துவங்கப்பட்டபோது, முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய், 'முதலில் தேசம். அடுத்து கட்சி, கடைசியில் தனிநபர்' என்ற முழக்கத்தை முன்வைத்தார்.


 பாஜகவினர் ஒவ்வொருவருக்கும் தன்னைவிட, கட்சியைவிட, பாரத தேசமே முக்கியம். அதுதான் பாஜகவின் அடிப்படை கொள்கை.


அதனால்தான், நேர் எதிரான கட்சிகளாக இருந்தாலும் பாஜக அனைத்து கட்சிகளுடன் எப்போதும் நட்பு பாராட்டி வருகிறது.



 பாஜகவின் அந்த பாரம்பரியத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் நாகரிகத்தை எப்போதும் கடைப்பிடித்து வருபவர். 


முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்  வழியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றி வரும் மாற்று கட்சிகளை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து, அவருடைய பெருமைகளை

உழைப்பை தியாகத்தை, போற்றி வருகிறார்..  


இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு நேர் எதிரான அரசியல் சக்தி முலாயம்சிங் யாதவ். 


அவரது சமாஜ்வாதி கட்சியை எதிர்த்து தான் பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது.


 ஆனால், முலாயம்சிங் யாதவுக்கு, பிரதமர் மோடி அரசுதான் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மவிபூஷன்' விருது வழங்கியது. 


தேசிய அளவில் பாஜகவின் பிரதான எதிரியான, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத ரத்னா' விருது பிரதமர் மோடி ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.


தமிழகத்தில் பாஜகவுக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி திமுக. ஆனாலும், 'ஊர் கூடி தேசம் என்ற தேரை இழுக்க வேண்டும்' என்பதற்காக,   முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுடன் பிரதமர் மோடி மிகுந்த அன்புடன் நட்பு பாராட்டினார்.




அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ? என்கிற தமிழ் பண்பாட்டின் வழியில், அரசியல் மாச்சரியங்களை கடந்து, தமிழக முதல்வராக ஐந்து முறை பணியாற்றிய கருணாநிதி உடல்நிலை சரி இல்லாமல் இருந்தபோது, பிரதமர் மோடி நேரில் அவரின் கோபாலபுரம் இல்லத்தில்  சந்தித்து நலம் விசாரித்தார்.


 பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை என்பதை இப்போது நினைவு கூற விரும்புகிறேன்.

 

திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி!!!

கடந்த 2024 ஜூன் 3, கருணாநிதி அவர்களின் 101- வது பிறந்தநாளில்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி. அறிவுக்கூர்மை காரணமாக பெரிதும் மதிக்கப்படுபவர். நானும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்தபோது அவருடன் நடத்திய உரையாடல்களை நினைவு கூர்ந்து பார்க்கிறேன் என்று புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.


முன்னாள் முதல்வர் கருணாநிதி 100 நாணயம்!!! மத்திய அரசு வெளீயீடு!!!

அந்த அரசியல் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு  வெளியிடுகிறது.


 பாஜக முன்னாள் தேசிய தலைவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி 


நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ...பிரதமர் நரேந்திர மோடி, 


"தேர்தல் களத்தில் தான் நாம் எதிரிகள். இப்போது தேர்தல் முடிந்து விட்டது.

 நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைப்போம்" என அறைகூவல் விடுத்தார். 


வெறும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் அதை காட்டுகிறார் என்பதைத்தான் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா காட்டுகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணா மலை பங்கேற்பு!!!



திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சிப்பவர் அண்ணாமலை. பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இல்லாவிட்டாலும், தமிழக மக்களை பொறுத்த வரை அண்ணாமலை தான் எதிர்க்கட்சித் தலைவர். 

அந்த அளவுக்கு ஆளுங்கட்சியின் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி வருகிறார்.



 திராவிட மாடல் சித்தாந்தத்தை, திராவிட மாடல் திமுக அரசின் தவறுகளை எதிர்ப்பதில் சமரசம் இல்லாமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அண்ணா மலை


ஆனாலும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணய வெளியிட்டு விழாவில் பங்கேற்கிறார்


 இதுதான் பாஜக பின்பற்றும் அரசியல் பாதை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக