வெள்ளி, 24 மே, 2024

இத்தாலி சோனியாவிடம் சிக்கியது ம் காங்கிரஸார் மாட்டுக்கறி தான் சாப்பிடுகிறார்களா? பன்றி இறைச்சி பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் ?தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

அவர் அறிக்கை யில் கூறியிருப்பதாவது...

காங்கிரஸ் அலுவலகத்திலும், இளங்கோவன் வீட்டிலும் மாட்டுக்கறி தான் சாப்பிடுகிறார்களா?



மாட்டுக்கறி பற்றி பேசுபவர்கள், பன்றி இறைச்சி பற்றி பேச மறுப்பதன் மர்மம் என்ன?


"தமிழக பாஜக தலைமை அலுவகமான கமலாலயத்தை முற்றுகையிடுவோம்" என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.


 அதற்குப் பதிலளித்த, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "எங்கள் மாநிலத் தலைமையகத்தை முற்றுகையிடும் தேதியை முன்கூட்டியே தெரிவித்தால், வரப்போகும் 10 பேருக்கு உணவு தயார் செய்வோம்" என அறிவித்தார்.


அதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்கிறோம். எங்களுக்கு மாட்டுக்கறி உணவை   தயாரித்து வையுங்கள்" என கூறியிருக்கிறார்.


மகாத்மா காந்தி வழிநடத்திய காங்கிரஸ் கட்சி, இத்தாலி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற காங்கிரஸ் கட்சியினர் மாட்டுக்கறி தான் சாப்பிடுகின்றனர் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வருகிறது


காங்கிரஸ் அலுவலகத்திற்கும், இளங்கோவன் வீட்டிற்கு வருபவர்களுக்கும் மாட்டுக்கறி உணவுதான் பரிமாறப்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இளங்கோவனும் மாட்டுக்கறி உணவு கேட்கிறார்


மாட்டுக்கறி என திரும்ப திரும்ப பேசுபவர்கள், பன்றி இறைச்சி பற்றி பேச மறுப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. எல்லாம் வாக்கு வங்கி படுத்தும்பாடு.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்

கைபேசி: 984017021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக