புதன், 1 மே, 2024

தூத்துக்குடியில் மே தின முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு இடங்களில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்

2024 இன்று மே 1 தினம் முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் அதிமுக வினர்  பல் வேறு இடங்களில் குளிர் நீர் பானங்கள் வழங்கி குடிநீர் பந்தல் திறந்து வைத்தார்கள்.



கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்க தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில்... பல் வேறு இடங்களில்....

இன்று 01.05.2024 புதன் கிழமை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. சண்முகநாதன்  தலைமையில் கோடை கால நீர், மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் 

அமைச்சர் சித செல்லப்பாண்டியன் சார்பில் ...


முன்னாள் அமைச்சர் வர்த்தக அணி செயலாளர்  சி.த. செல்லபாண்டியன்  ஏற்பாட்டில் தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு கோடைக்கால குளிர் நீர் பந்தல் திறந்து அங்கு கரும்பு சாறு, இளநீர் திராட்சை,அன்னாசி பழதுண்டுகள் , நீர்மோர், மாம்பழ ஜுஸ் பாட்டில் கள் வழங்கினார் கள்.

எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள் சார்பில்...

அடுத்து....

 காலை 10.30 மணிக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள் ஏற்பாட்டில் திருச்செந்தூர் ரோடு, போல்டன் புரம் சந்திப்பில்  குளிர்பானங்கள் நீர் மோர் வழங்கினார் கள்



பகுதி செயலாளர் கே.ஜெய்கனேஷ் சார்பில்...

அடுத்து..

11.00 மணிக்கு மத்திய வடக்கு பகுதி சார்பில் பகுதி  செயலாளர் கே. ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிர்ப்புறமும் கோடைகால நீர், மோர் பந்தல் திறந்து பதனீர், நுங்கு, குளிர்பானங்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக