திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழக பத்திரிகை, ஊடக உறவுகள் கவனத்துக்கு.........

தமிழக பத்திரிகை, ஊடக உறவுகள் கவனத்துக்கு.........

.....................................

 வரும் மே -2 முதல் அரசால் அங்கீகரிக்கப்படாத பிரஸ், காவல், வக்கில், மின் வாரியம், மனித உரிமை போன்ற வாகன ஸ்டிக்கர்களை அவரவர்களின் தனியார் வாகனங்களில் ஒட்டியிருந்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநில தலைவர் 



 இதற்குரிய முழுமையான விபரத்தை காவல்துறையோ, தமிழக செய்தி துறை யோ இந்த எச்சரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

 ஆனால், "அரசால் அங்கீகரிக்கப்படாத பிரஸ்,,,,," என்று மட்டும் சுட்டிக்காட்டியுள்ளது.


 அப்படியென்றால், செய்தி துறை, மற்றும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக சார்பாக செய்தியாளர், ஊடகவியலாளருக்குவழங்கப்பட்டிருக்கும் "PRESS, MEDIA" என்ற வாகன ஸ்டிக்கர்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்று வலியுறுத்துகிறது.




அதே நேரம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 13 பத்திரிகை சங்கங்கள் மூலம் வழங்கப்படும் வாகனஸ்டிக்கர்களை பயன்படுத்தலாம் என்று தானே பொருள். 


அந்த வகையில் 13அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகை சங்கங்களில் "தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ்  யூனியன் (பதிவு எண்: 2963 CNI) ஒன்றாகும். 


இந்த எங்கள் யூனியன் புது டெல்லியில் 70 வருடமாக இயங்கும் All India News paper Employees Federation-என்ற தேசிய அமைப்பில் 18 வருடமாக இணைக்கப்பட்டு செயல்படும் ஒரு மூத்த பத்திரிகை சங்கம் எங்களுடையது.  

      

 எனவே, செய்தித் துறை, மற்றும் காவல்துறையிடம் நீண்ட காலமாக முறையிட்டும் இதற்கான, முறையான வாகன ஸ்டிக்கர் தர  (முன் வராததால்) மறுப்பதால் - தங்கள் செய்தியாளர் கள் செய்தி சேகரிக்க வாகன ஸ்டிக்கர் வழங்க அவசியம் தேவைப்படுகிறது.


 சில அங்கீகாரம் பெற்ற பத்திரிகை சங்கங்களும் வழக்கத்தில் வாகன ஸ்டிக்கர்ள்  வழங்கியும் வருகின்றன.

   

அதைப் போலவே, தமிழகத்தில் மத்திய ரசால்  R.N.I பதிவு பெற்ற பத்திரிகைகளும் தங்களின் செய்தியாளர்கள் தடை ஏதுமின்றி செய்தி சேகரிக்க அந்தந்த R.N. I பதிவு பெற்ற பத்திரிகைகள் மூலம் வாகன ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 


இதனை காவல்துறை ஏற்க மறுக்கிறதா? ஏனெனில்

  இதற்குரிய விபரங்களை காவல்துறையும், செய்தி துறையும் அரசு Go மூலம் அறிவிக்காமல் காவல்துறை எச்சரிக்கையாக பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருப்பதை "எங்களது தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் " வருத்தம் தெரிவிக்கிறது.

போலிகளை கண்டறியுங்கள்

 அதே நேரம், உண்மையான பத்திரிகை - ஊடகவியாளர்களை பாதுகாக்கவும், போலிகளை கண்டறிந்து ரூ 500 அபராதம் விதிப்பதையும் காவல்துறையை பாராட்டாமல் இருக்க முடியாது. 


இந்த வாகன ஸ்டிக்கர் நடைமுறைச் சட்டம் சென்னைக்கு மட்டுமா? தமிழக முழுவதற்குமா? என்பதையும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து இந்த நடவடிக்கை இருக்குமா?அல்லது அவப்போது நடைபெறுமா? என்பதையும் காவல்துறை குறிப்பிடவில்லை.


 ஏனென்றால், கடந்த ஜனவரி மாதத்தில் ஏடிஜிபி அருண் அவர்கள் இதே போன்று வாகன ஸ்டிக்கர் தடை எச்சரிக்கை அறிவித்தார்.


 ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்ததாலோ என்னவோ அந்த அறிவிப்பு சுவடு தெரியாமல் போனது.


 ஆகவே,இந்த எனது வேண்டுகோளிற்கு தமிழகம் முழுவதுமுள்ள சக பத்திரிகை சங்கங்களும், சக பத்திரிகையாளர்களும் தங்கள் தங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

-மு.சிவதமிழவன், மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,

தேசிய அமைப்புச் செயலாளர் - ஆல் இந்தியா நியூஸ் பேப்பர் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் .

மற்றும் ஆசிரியர் - வெளியிடுபவர்

சட்டம் ஒழுங்கு - புதுவைதேசம் (RNI) மாத இதழ்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக