புதன், 10 ஏப்ரல், 2024

தூத்துக்குடியில் அதிமுக தம்பியை டெபாசிட் இழக்க களம் இறங்கினார் அண்ணன்!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

Photo arunan 

news by sunmugasunthram Reporter


தூத்துக்குடியில் வேட்பாளர் அதிமுக தம்பியை டெபாசிட் இழக்க களம் இறங்கினார் அண்ணன்!!!



அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தொிவித்து எஸ்டிபிஐ நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.

இது பற்றிய செய்தியாவது:-


முன்னாள் திமுக எம்.பி எஸ்.ஆர் ஜெயத்துரை அமைச்சர் கீதாஜீவன் உடன் சந்தித்து திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறுவது உறுதி என்றார் .
அதற்காக தனது உடன் பிறந்த தம்பியும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான சிவசாமி வேலுமணி டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்கடிக்க வேண்டும் கனிமொழி வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என களத்தில் அமைச்சர் கீதாஜீவன் உடன் இணைந்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அவருடன் பேசினார்.
இனி தூத்துக்குடி யில் திமுக அதிமுக சூடு பிடிக்கிறது.

அடுத்தாக...

தூத்துக்குடி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் எஸ்டிபிஐ கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 


அந்த கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஓதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தற்க்கு எதிர்ப்பு தொிவித்து எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி தலைமை ேதர்தல் காாியாலயத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நோில் சந்தித்து அவரது முன்னிலையில் எஸ்டிபிஐ கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத், கிளைத்தலைவர் ஷாஜஹான், கட்டுமான அமைப்பு சாரா ெதாழிலாளர் நலச்சங்க தலைவர் காஜாமுபாரத், ஆகியோர் திமுக வில் இணைந்தனர்.

 அனைவருக்கும் திமுக வேஷ்டி அணிவித்து வரவேற்ற அமைச்சர் கீதாஜுவன் வரும் நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி கட்சியின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் கவுன்சிலர் முகம்மது ஷாஜஹான், தேசிய வாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் செய்யது அலி, உடனிருந்தனர்.


 முன்னாள் திமுக எம்.பி எஸ்.ஆர் ஜெயத்துரை, உள்பட பல்ேவறு சமூகநல அமைப்புகள் அமைச்சரை சந்தித்து தோ்தல் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து கலந்துரையாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக