ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் மறைந்த முதலமைச்சர் ஜெ- யின் 76 வது பிறந்தநாள் விழா. நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சிறப்புரை. அதிமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாபு முருகவேல் பங்கேற்பு

🇹 🇭 🇴 🇴 🇹 🇭 🇺 🇰 🇺 🇩 🇮 

🇱 🇪 🇦 🇰 🇸  26-2-2024

தூத்துக்குடியில் மறைந்த முதலமைச்சர் ஜெ- யின் 76 வது பிறந்தநாள் விழா. நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சிறப்புரை. அதிமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாபு முருகவேல் பங்கேற்றனர்.



 இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி பெ 26


அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ- யின் 76 வது பிறந்தநாள் விழாவை ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.


 அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.


தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன் தலைமை தாங்கினார்.

𝘗𝘩𝘰𝘵𝘰 𝘣𝘺 𝘴𝘶𝘮𝘶𝘨𝘢 𝘷𝘦𝘭


பகுதிச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சுடலை மணி, எஸ்.கே. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் வரவேற்று பேசினார்.


 பொதுக்கூட்டத்தில் 1076 பேர் பயன்பெறும் வகையில் பெண்களுக்கு தையல் மிஷின்கள், மிக்ஸி, சலவைத் தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டி, மின்சார அயன் பாக்ஸ், சில்வர் குடம், ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர சைக்கிள், வேஷ்டி சேலை என ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பேசினார்.


அதிமுக அறிவிப்பின்படி பங்கேற்ற அதிமுக செய்தி தொடர்பாளரும் மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல் முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் மக்கள் விரோத போக்கையும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக செய்யும் சூழ்ச்சிகளையும் தெளிவாக எடுத்துரைத்து பேசினார்.




கூட்டத்தில்  அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, தலைமைக் கழகப் பேச்சாளர் இசையமுரசு ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், அருண் ஜெபக்குமார்,  சுதர்சன் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ருமணி, சுகந்தன் ஆதித்தன், பிள்ளை விநாயகம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லட்சுமணன், முருகன், எம்பெருமாள், துணைச் செயலாளர்கள் முத்துக்கனி, ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் மனுவேல்ராஜ், வலசை வெயிலு முத்து, திருச்செந்தூர் மாவட்ட பிரதிநிதி ஆர்எம்கேஎஸ்.  சுந்தர், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், டைகர் சிவா, வழக்கறிஞர்கள் முனியசாமி, ரவீந்திரன், சரவண பெருமாள், உஷா சுரேஷ், சிவபெருமாள், உதயகுமார், ராஜ்குமார், ஆறுமுகம், சரவணகுமார், ஜில்லு ரமேஷ், நாகர்கோவில் ஷாம், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், கேடிசி ஆறுமுகம், தெர்மல் தெர்மல் கே.என். ஆனந்தராஜ், ஜேசுராஜ், ஜான்சன் தேவராஜ், சண்முகவே வேல்,பூக்கடை வேலு, சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, நிலா சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜிலா, சாந்தி, பொன்ராஜ், தமிழரசி,  மகளிர்கள் சண்முகத்தாய், இந்திரா, ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, அன்ன பாக்கியம், பானுமதி, முத்துலட்சுமி, நிர்வாகிகள் மாவட்ட வர்த்தக அணி சுகுமார், வெங்கடேஷ், கே.கே.பி. விஜயன், பிரபாகரன், ஜவகர், ஹார்பர் பாண்டி, சங்கர் நாராயணன், இசக்கி முத்து, இம்ரான், நாகூர் பிச்சை, சேவியர் ராஜ், வட்டச் செயலாளர்கள் ஜனார்த்தனன், கொம்பையா, ரவீந்திரன், சுப்பிரமணி, மகாராஜா, ராமச்சந்திரன், சுயம்பு, சங்கர், சந்திரசேகர், எஸ்.கே முருகன், மணி கணேஷ் புற்றுக்கோவில் முருகன், அருண் ஜெயக்குமார் மணிவண்ணன், பொன் சிங்,  வின்ஸ்டன் அன்டோ, நவ்ஷாத், ஜெயக்குமார், அந்தோணிராஜ், ரகுநாதன், ரங்கன், உதயசூரியன், மனோகர், உலகநாத பெருமாள், டைமன் ராஜ், பூர்ண சந்திரன், செல்வராஜ், மாடசாமி, யோவான்,சண்முகவேல் மற்றும் சொக்கலிங்கம், சோபன் பாலசிங், சரவணவேல், வசந்த், முகமது காளிப் உசேன், உதயகுமார், தளவாய் ராஜ், செல்வம், திலகர், பாலாஜெயம் சாம்ராஜ் சகாய ராஜா உள்ளிட்ட பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

 நிகழ்ச்சி நிறைவாக மேற்கு பகுதி ஐடி விங் செயலாளரும் வட்டச் செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட அதிமுகவினர் செய்திருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக