சனி, 24 பிப்ரவரி, 2024

திராவிட மாடல் ஆட்சி மகளிர்-க்கான ஆட்சிதான் தூத்துக்குடியில் கனிமொழி எம்பி!!! தமிழகம் புதுச்சோி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது ஓட்டு கேட்க வரும் பிஜேபியினாிடம் எங்கள் பணம் எங்கே என்ற கேள்வியை கேட்க வேண்டும் ஒன்றிய அரசிற்கு நாம் பாடம் புகட்டியாக வேண்டும்.என பரபரப்பு பேச்சு!!!

thoothukudileaks 24-2-2024

photo news by sunmugasunthram journalist 

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்பது அது மகளிருக்கான ஆட்சி


தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேசினார்.




இதுபற்றிய செய்தியாவது:-

 தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் அணி மகளிர் தொண்டரணி ஆலோசனை தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் உள்ள அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 





  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக துணைபொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி பெண்கள் அனைவருக்கும் சேலை வழங்கினார் 

அதன் பின்னர் கனிமொழி எம்பி பேசியதாவது :-


இந்த அரங்கம் நிறைந்த கூட்டத்தை பாா்க்கும் போது தமிழகம் புதுச்சோி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது.


 திராவிட மாடல் ஆட்சி மகளிர்கான ஆட்சிதான் ஏனென்றால் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நமது தலைவர் ஸ்டாலின் முதல் கையெழுத்து பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம், மேற்கொள்ளலாம் என்று கையெழுத்திட்டார்.


 யாரையும் எதிர்பார்க்காமல் இந்த பொறுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.


 பெண்கள் ஆண்களை எதிர்பாா்க்காமல் தனது தாய் தந்தையரை பார்க்க மட்டுமின்றி அவசர நிமித்தமாக மற்ற பணிகளுக்கு செல்வதற்கு இந்த இலவச பேருந்து பயணம் அமைகிறது.


 இதன் மூலம் ஓவ்வொரு பெண்களுக்கும் மாதம் 888ரூபாய் மிச்சப்படுகிறது. 


வீட்டில் முடங்கி கிடப்பவர்களுக்கு எழுச்சியுட்டும் பணியை முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார். கலைஞர் ஆட்சியில் 10ம்வகுப்புவரைபெண்கள் படிக்க வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி திருமண உதவி தொகை வழங்கினார். 


தற்போது தமிழக முதல்வர் அதனை யும் தாண்டி எல்லா பெண்களும் கல்லூாி படிப்பைப் தொடர வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். 



உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உாிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1000வீதம் 1 கோடியே 15லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


 மாவட்டத்தில் எதிர்பாராத மழை வௌ்ளத்தால் பொதுமக்கள் விவசாயிகள் மீனவர்கள் வியாபாாிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர்.


 அதற்கு நாம் நிதி கோரினோம் ?

பிரதமர் இதுவரை எதுவும் வழங்காமல் இருந்து வருகிறார்.


 இதற்கிடையில் இரண்டு ஓன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓன்றிய அதிகாாிகள் குழு வந்து பார்வையிட்டு வந்து சென்றுள்ளனர். 


எதுவும் வழங்காத நிலையில் அனைவருக்கும் நானிருக்கிறேன் என்ற உறுதியை வழங்கி தமிழக முதலமைச்சர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நம்முடைய மாவட்டத்திற்கு நோில் வருகிறார்.


 தமிழக்திலிருந்து பல்வேறு வகையில் ஓன்றிய அரசு எடுத்துச்செல்லும் வரி வருவாயில் கூட தமிழகத்திற்கு குறைவாகவும் உத்திரபிரதேசத்திற்கு அதிகமாகவும் வழங்கி பிஜேபி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது.


 இப்படி பட்ட ஒன்றிய அரசிற்கு நாம் பாடம் புகட்டியாக வேண்டும். 


வரும் நாடாளுமன்ற தோ்தலில் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு ஓட்டு கேட்க வரும்.. பிஜேபியினாிடம் எங்கள் பணம் எங்கே என்ற கேள்வியை கேட்பது மட்டுமின்றி யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதில் நாம் தௌிவாக இருக்கும் வகையில் கலைஞர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை திருமண நிகழ்வு உள்ளிட்ட கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் நீங்கள் அரசியல் பிரச்சனை பேசி தின்னை பிரச்சாரத்தின் மூலம் திமுகவிற்கு வாக்கு சேகாிக்க வேண்டும்.


 ஓன்றிய அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தபோது அவர்களோடு இருந்து எல்லாவற்றையும் ஆதாித்த எடப்பாடி இன்று எதிர்ப்பதாக கூறிவருகிறார்.



 இவர்களால் நாட்டிற்கு நன்மையில்லை. ஓன்றிய அரசு பல நுழைவு தேர்வு என்று கொண்டு வருவதன் மூலம் எதிர்காலத்தில் நம்முடைய குழந்தைகள் மருத்துவம் மற்றும் கல்வி துறையில் சாதனை படைக்க முடியாத நிலைக்கு அழைத்து செல்கின்றன.

 இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஜாதி மதத்தின் பெயரால் பிளவு படுத்துவதை அனுமதிக்க முடியாது.


 மணிப்பூரில் இன்று வரை அமைதி திரும்பவில்லை. எல்லோருக்கும் நன்மை அளிக்கும் வகையில் இந்தியா கூட்டணி இந்திய திருநாட்டில் வெல்ல வேண்டும் இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக