பொது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளகுறுகிய ரோட்டில் வேகமாக வந்த கார் மோதி டூவீலர் சேதமடைந்தது மயிரிழையில் உயிர் தப்பிய தூத்துக்குடி நிருபர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தமிழ் செய்தி நாளிதழில் நிருபராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று 13-10-2023 பிற்பகலில் தாமோதர நகர் மெயின் ரோட்டில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் அவரது வாகனத்தின் மீது இடித்து மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
கார் நம்பர் பிளேட் பதிவு எண் TN 69 BH 8652 எழுதப்பட்டு இருந்தது
கார் மோதியதில்...தூத்துக்குடி நிருபர் மாரிமுத்துவின் டுவிலர் படுசேதம் அடைந்தது.
இது தொடர்பாக நிருபர் மாரிமுத்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக