வெள்ளி, 13 அக்டோபர், 2023

அதிமுகவில் முன்னாள் சித செல்லப்பாண்டியனுக்கு அதிமுக புதிய பதவி உயர்வு கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு

thoothukudileaks 13-10-2023

photo news by arunan journalist 

தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியனுக்கு அதிமுகவில் புதிய கட்சி பொறுப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு தூத்துக்குடி அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு 



இதுபற்றி செய்தியாவது:-

 அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன்  தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் பரபரப்பு அரசியல் செய்து வருபவர் இதனால் ஆதரவாளர்கள் இவருக்கு அதிகமாக இருந்து வருகிறார்கள்.

இதற்காக.. தூத்துக்குடியில் சிதம்பர நகர் பகுதியில் அதிமுக கட்சி அலுவலகம் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.பிரஸ்மீட் நடத்துகிறார்.

old file video 
 

தற்போது முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார் 

மாவட்ட செயலாளர் பொறுப்பு எதிர் பார்த்து காத்து இருந்தார் இதற்காக அடிக்கடி கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யை சந்தித்து வந்தார் .

இந்நிலையில்...

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(12-10-2023) அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அதிலிருந்து விடுவித்து அவருக்கு பதவி உயர்வாக அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் பொறுப்பு கொடுத்திருப்பதாக அறிவித்தார் .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 


இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

இதுபற்றி அதிமுக கட்சி பிரமுகர் கூறுகையில்...

கடந்த செப்டம்பர் மாதம் பேறிஞர் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் விளாத்திகுளம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற போது அந்த பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பரபரப்பாக பே சி 🔥 தீ பிழம்பாக தெறித்து உள்ளார்.

இதன் ரியாக்ஷன் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி மற்றும் கனிமொழி எம்பி பற்றி அவதூறாக பேசியதாக காவல்நிலையத்தில் திமுக சேர்ந்த நிர்வாகிகள் அவதூறு வழக்கு மூன்று பிரிவுகளில் பதிவு செய்தனர்  காவல் துறை விரைந்தது கைது செய்ய துடித்தது.

இந்நிலையில் 12-10-2023 நேற்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜாராகி ஆட்சி பற்றி அரசியல் விமர்சனம் செய்ததாகவும் முதல்வர் மற்றும் உதயநிதி கனிமொழி குறித்து தவறாக பேசவில்லை மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு வராது என உத்தரவாதம் அளிக்கிறேன் என விளக்கமும் அளித்தார்

இதன் பேரில் 15 நாட்களில் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது 

இந்த பரபரப்பினால் கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  மனதில் நல்ல பெயர் வாங்கி விட்டதாகவும் அதனால் தான் தற்போது இந்த அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் என் பெரிய பொறுப்பு வழங்கி உள்ளார்கள்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தூத்துக்குடியில் பெரிய பொறுப்பு வழங்க போகிறார் என்கிறார்கள்.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக