ஞாயிறு, 22 அக்டோபர், 2023

சிறுவர்களிடம் கஞ்சா தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் 3 பேர் கைது

தூத்துக்குடி லீக்ஸ் : 22.10.2023


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த  மூன்று பேர் கைது - 4 கிலோ 500 கிராம்  கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் . மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று (21.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது  வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன்களான சின்னத்தம்பி (26), செல்வராஜ் (எ) செல்லக்குட்டி (28) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார்  சின்னத்தம்பி மற்றும் செல்வராஜ் (எ) செல்லக்குட்டி ஆகியோரை கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.


 மேற்படி இவர்களிடமிருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். 


மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட  சின்னத்தம்பி மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகளும், 

அடுத்து செல்வராஜ் (எ) செல்லக்குட்டி மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், இளஞ்சிறார் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக