thoothukudileaks 24-10- 2023
photo news by arunan journalist
தூத்துக்குடி வியாபாரி செல்ல பாண்டியன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் தமிழக முதல்வர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை கண்டனம் தென் சென்னை மாவட்ட தலைவர் தளபதி கிருஷ்ணகுமார் அறிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களின் அத்துமீறலால் அதிர்ச்சியில் பலியான வியாபாரியின் மனைவி- தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை கண்டனம் தென் சென்னை மாவட்ட தலைவர் தளபதி கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
, தூத்துக்குடி மாநகரில் பலசரக்கு கடை வியாபாரம் செய்து வந்த வியாபாரி செல்ல பாண்டியன் தனக்கு கடைக்கு முன் விற்பனைக்குரிய பொருட்களை வாடிக்கையாளரின் வசதிக்காக அடுக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் அத்துமீறல் நடவடிக்கையாக பல சரக்கு கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
சாதாரணமாக ஆய்வுக்கு வரும் அலுவலர்கள் கடைக்காரர்களிடம் வெளியே பொருட்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள்.
ஆனால் எதனையோ எதிர்பார்த்து அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்துள்ளனர். இதனால் பெரிதும் அதிர்ந்த கடை உரிமையாளர் செல் ல பாண்டியன், தனது மனைவி சசிகலாவிடம் கடையை அதிகாரிகள் சீல் வைத்து விட்டார்கள் என்ற தகவலை பெரும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
கடை சீல் வைக்கப்பட்ட செய்தி கேட்ட செல்ல பாண்டியன் மனைவி சசிகலா அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களின் மனிதாபிமானம் இல்லாத நடவடிக்கையை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மாநகராட்சி அலுவலர்களின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் வணிகர்களின் துயர் துடைக்கும் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வியாபாரி செல்ல பாண்டியன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தலைவர் சுதேசி நாயகன் அய்யா வெள்ளையன் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் தளபதி கிருஷ்ணகுமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக