thoothukudi leaks 21-8-2023
News by arunan
தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (NCSRC) சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்து, கருத்தரங்கில் உரையாற்றினார் .
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில், இன்று (21/08/2023) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (NCSRC) சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்து, கருத்தரங்கில் உரையாற்றினார் தூத்துக்குடி
எம்.பி.கனிமொழி.
இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமா கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர்.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர்.ஜெகன் பெரியசாமி,
மகளிர் ஆணையத் தலைவர் .குமரி விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், NCSRC இயக்குனர் காளிராஜ், கல்லூரி செயலர் .சோமசுந்தரம், கல்லூரி முதல்வர் பூங்கொடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக