thoothukudi leaks 19-8-2023
த. சண்முகசுந்தரம்
மூத்த பத்திரிகையாளர்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதி பாஸ்நகர் கருமாரியம்மன் கோவில், பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான, கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணக்குமார், தலைமை வகித்தார். திமுக கிளை செயலாளர் வேல்ராஜ் முன்னிலை வகித்தார். மாரியப்பன் வரவேற்பு உரை ஆற்றினார்.
பின்னர் ஜோதி பாஸ்நகர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வீட்டிற்கு நேரடி இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான பூமி பூஜையை சரவணக்குமார் தொடங்கி வைத்து பேசுகையில், இந்த பகுதி உருவாக்கப்பட்டு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணிகளும் முறையாக நடைபெறவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்;, மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி இந்த பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கருமாரி அம்மன் கோவிலுக்கு ஊராட்சியின் சார்பில் தீர்வை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் கட்டுமான பணிகளின் போது சில பொருட்கள் உபகரணங்கள் செய்துள்ளேன். பகுதியில் புதிய பல சாலைகள் அமைத்து கொடுத்துள்ளேன். கொரனா காலக்கட்டத்தில் சில உதவிகளை செய்து தந்துள்ளேன். அதேபோல் இப்பகுதியில் மின்கம்பத்தால் பாதிப்பு என்று கூறியவுடன் இரும்பு கம்பம் அகற்றப்பட்டு சிமிண்ட் கம்பம் அமைத்து கொடுத்துள்ளேன். அதேபோல் அறுபது ஆயிரம் லிட்டர் குடிதண்ணீர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைத்து கொடுத்துள்ளேன். இந்த பகுதியில் தற்போது 298 பேருக்கு ஊராட்சி மூலம் தீர்வை வழங்கப்பட்டு உள்ள வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீட்டிற்கு நேரடியாக குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். உங்களது கோரிக்கையான இப்பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். என்ற பணியை விரைவில் செய்து கொடுத்து விடுபட்ட சாலைக்கும் புதிய சாலைகள் அமைத்து தருவேன் என்று பேசினார்.
பின்னர் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு சால்வை வழங்கி கௌரவித்தார். விழாவில் திமுக ஒன்றிய துணை செயலாளர்கள், வசந்த குமாரி, கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக கிளை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், மகளிரணி சண்முகத்தாய், மற்றும் ராயப்பன், பாண்டி கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக