தூத்துக்குடி லீக்ஸ் 9-4-2023
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் இன்று 9-4-2023 அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் படிவம் விநியோகம் நாளை (10.04.2023) காலை முதல் துவங்குகிறது.
அதிமுக அடிப்படை உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினரை சேர்க்கவும் உறுப்பினர் படிவத்தை விநியோகம் செய்து கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவரது பணியை துவங்கி வைத்துள்ளார்கள்.
அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினருக்கு நாளை (10.04.2023) காலை 11.00 மணிக்கு தூத்துக்குடியில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் வைத்து புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்படுகிறது.
முன்னதாக தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் பகுதி கழகங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது.
மேலும், மாலை 4 மணிக்கு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்காத திருச்செந்தூர் நகராட்சி திமுக நிர்வாகத்தை கண்டித்தும், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வலியுறுத்தியும் திருச்செந்தூர் பகவத்சிங் பேருந்து நிலையம் முன்பு அதிமுக நகரக் கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசுகிறேன்.
மேற்கண்ட கழக நிகழ்வுகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகள், வட்ட கழக, கிளைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவண்:-
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக