thoothukudileaks 9-4-4-2023
photo news by shanmuga sunthram
தூத்துக்குடி மாநகர்
18வது வார்டு ...
52-வது வார்டு...
பகுதிகளில் (8-4-2023 )அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பது நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி மாநகரம் 18-வது வார்டு
தூத்துக்குடி மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட மில்லர்புரம், ஹவுசிங் போர்டு அருகில் ..
அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அவர்களிடம் நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலெட்சுமி, கவுன்சிலர் ஜான், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட செயலாளர் பொன்னுச்சாமி, வட்ட துணைச்செயலாளர் பெட்றோனிலா மேரி, அவைத்தலைவர் வேல்முருகேசன், வட்டப்பிரதிநிதிகள் வேல்முருகன், மகாராஜன், சகாயதாஸ், வில்சன், முன்னாள் கவுன்சிலர் கனியம்மாள், வர்த்தக அணி ஆனந்தசேகர், பொருளாளர் அருணாச்சலம், செயற்குழு உறுப்பினர் பாலையா, மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகரம் 52-வது வார்டு
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
![]() |
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டு பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களிடம் டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்து வருகின்றனர்.
அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வீட்டு மனை பட்டா, பஸ் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதை கீதாஜீவன் பெற்றுக் கொண்டு, விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தொழிற்சங்க தலைவர் மரியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட கூட்டுறவு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வேல்முருகேசன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், வைதேகி, ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட், மதிமுக மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் மகாராஜன், மீனவரணி செயலாளர் நக்கீரன், பகுதி செயலாளர் பொன்ராஜ், உள்ளிட்டோர் சார்பிலும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக