சனி, 1 ஏப்ரல், 2023

தூத்துக்குடியில் சாதரணமாக டீ ஷர்ட் உடையணிந்து சைக்கிளில் ரோந்து வந்த தூத்துக்குடி எஸ்பி

 தூத்துக்குடி மாவட்டம் : 01.04.2023


தூத்துக்குடியில் சாதரணமாக டீ ஷர்ட்  உடையணிந்து சைக்கிளில் வந்தார் தூத்துக்குடி எஸ்பி  டாக்டர் எல். பாலாஜி சரவணன் 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில்  பாலாஜி சரவணன்  SP சாதாரண உடையணிந்து சைக்கிளில் நகர் வலம் வந்தார். 



அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது நின்றவர்..... சந்தேகத்திற்கிடமாக கையில் மண்வெட்டி கணையுடன் திரிந்தவரை பிடித்து ....விசாரணை செய்தார். 


பின் அவரை தென்பாகம் காவல் நிலையத்திற்கு அனுப்பி, அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அவருக்கு உத்தரவிட்டார்.



அவ்வாறு ரோந்து சென்றவர் திடீரென தென்பாகம் காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று ஆவணங்களையும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டார். 

வீடியோ பார்க்க ...

மேலும் காவல் நிலையம் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளனவா எனவும் பார்வையிட்டு அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக