சனி, 1 ஏப்ரல், 2023

தூத்துக்குடி மாப்பிள்ளையூரனியில்புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கை

 thoothukudileaks 1-3-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி புதிய திமுக உறுப்பினர்கள் சேர்க்கை ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.




இது பற்றிய செய்தியாவது:-

       தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒருகோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதை நிறைவேற்றுவதற்கு கூட்டங்கள் மூலம் ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்;ட செயலாளர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமாக அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி தலைமை வகித்தார். 


மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார் முன்னிலை வகித்தார். 


தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு சங்க தலைவருமான சரவணக்குமார், விண்ணப்பபடிவத்தை வழங்கி துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்;ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, உள்பட அனைத்து கிளைக்கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக