thoothukudileaks 30-3-2023
photo news by shanmuga sunthram
இந்திய அளவில் 3-இடம் பிடித்து சாதனை படைத்த தூத்துக்குடி மாற்றுத்திறனாளி மாணவிக்கு தூத்துக்குடி நடைபயிற்சி சங்கம் சார்பில் இன்று (30-3-2023) வரவேற்று பரிசு வழங்கினார்கள்.
மத்தியபிரதேஷ் மாநிலத்தில் இந்திய அளவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்-களுக்கான குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி-யை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாள் இந்திய அளவில் 3-இடம் பிடித்து சாதனைபடைத்தார்.
போட்டியில் கலந்து கொண்டு இன்று தூத்துக்குடி திரும்பினார் அவரை தூத்துக்குடி நடைபயிற்சி மேற்கோள்வோர் சங்கத்தினர் சார்பில் வரவேற்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்கான அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்றது .
இந்த போட்டியில்...இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சார்ந்த சுமார் 1000-க்கும் மேலானோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகம் சார்பாக தூத்துக்குடி-யை பூர்வீகமாக கொண்ட ராகவா நந்தம் என்பவரது மகள் ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற B.COM படிக்கும் கல்லூரி மாணவி கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்து பரிசு சான்றிதழ்களை பெற்று தூத்துக்குடி திரும்பிய ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா-வில் வைத்து நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் சார்பாக மாலை சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது .
இந்திய அளவில் நடைபெற்ற குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 3-இடம் பிடித்துள்ள இத்தகைய திறமை உள்ள மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த வேலை வழங்க வேண்டும் என நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினை சார்ந்த US.சேகர்,k.பழனிவேல்,துரைசிங்கம்,செல்லத்துரை,ஜெகன்,மணிகுட்டி,பிரபாகர்,சண்முகம்,லெட்சுமணன், சந்தனம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக