தூத்துக்குடி மாவட்டம்: 29.03.2023
photo news by police
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில்..கத்தி காட்டி செல்போன் பறித்து சென்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் சின்னத்துரை (53) என்பவர் நேற்று (28.03.2023) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேற்படி சின்னத்துரை அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் மகன் டேனியல் ராஜ் (22) மற்றும் சிலர் மேற்படி சின்னதுரையிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.
![]() |
| டேனியல்ராஜ் |
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் மற்றும் போலீசார் மேற்படி எதிரி டேனியல்ராஜை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி டேனியல்ராஜ் மீது ஏற்கனவே தருவைக்குளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக