புதன், 29 மார்ச், 2023

கொலை மிரட்டல் விடுத்த பிரபல திமுக பிரமுகர் தப்பியோட்டம் !!! தூத்துக்குடி காவல் துறை வலைவீச்சு!!!

 thoothukudileaks 29-03-2023

Photo news by Shankar

தூத்துக்குடியில் வாங்கிய கடனை கேட்ட நிதிநிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  பிரபல திமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். 



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி டூவிபுரம் 6ஆவது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (51) திமுக பிரமுகர். அவரது மனைவி தனசெல்வி (50). இருவரும் ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில்..

 கடந்த 2018 முதல் 2022 வரை மூன்று லாரிகளுக்கு கடன் வாங்கியுள்ளனர். 

ஒன்றரை ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்தாமல், கடனுக்கு வாங்கிய வாகனங்களை மறைத்து வைத்துள்ளனர். 


தவணை தொகையை சரியாக செலுத்தாததால் ரூ.1 கோடிக்கு மேல் கடன் தொகை உயர்ந்துள்ளது. 


இதையடுத்து நிதி நிறுவன மேலாளர் சங்கரும் ஊழியரும் கடன் கேட்க சென்றுள்ளனர். 


அப்போது மகேந்திரனும் அவரது மனைவியும் அவர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 


இதுகுறித்து நிதி நிறுவனம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. 


ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி தனசெல்வி மீது தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் 294(பி), 406, 409, 418, 120(பி), 506(2) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக