வியாழன், 2 பிப்ரவரி, 2023

துரோகி பாஜக ஒழிக கோஷம் எழுப்பிய தூத்துக்குடி அதிமுக!!!

 thoothukudileaks 3-2-2023

Photo news by Roja arunan 

துரோகி பாஜக ஒழிக கோஷம் எழுப்பிய தூத்துக்குடி அதிமுக வினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழகத்தில் இன்று 3-2-2023 அரசியல் தத்துவ ஞானி பேரறிஞர் பெருந்தகை அண்ணா  54வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனுஷ்டிக்கும் விதமாக பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறது .



தூத்துக்குடியில்  தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசியல் தத்துவ ஞானி பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை 03.02.2023 காலை 09.30 மணியளவில் தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் உள்ள  பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது .

துரோகி பாஜக ஒழிக கோஷமிட்ட தூத்துக்குடி அதிமுகவினர் ...


அப்போது பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கையில்  பேறிஞர் அண்ணா வாழ்க அண்ணா நாமம் வாழ்க என்றவர் கள் தீடீரென துரோகி பாஜக ஒழிக என அதிமுக வினர் ஆக்ரோஷமாக கோஷம் போட்டார்கள்.

 இன்று நடைபெற்ற நினைவு  நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக