தூத்துக்குடி மாவட்டம் :02.02.2023
தூத்துக்குடியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்தனர்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. மூக்கன் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர் செந்தில்குமார், தென்பாகம் காவல் நிலைய காவலர் . திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று (01.02.2023) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி செல்சினி காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தார்கள்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்களான முத்துக்குமார் மகன் தட்சிணாமூர்த்தி (19) மற்றும் முருகேசன் மகன் சிதம்பரம் (20) ஆகியோர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான தட்சணாமூர்த்தி மற்றும் சிதம்பரம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி தட்சிணாமூர்த்தி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக