வியாழன், 2 பிப்ரவரி, 2023

திருச்செந்தூர் பக்தர்கள் இடம் தங்க நகை திருடிய இரு பெண்கள் கைது

 தூத்துக்குடி மாவட்டம் :03.02.2023


திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடம் தங்க நகைகளை திருடிய 2 பெண்கள் கைது - ரூபாய் 1,70,000/- மதிப்புள்ள 5½ சவரன் நகைகள் மீட்பு.

இதுபற்றிய செய்தியாவது :-


தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 01.01.2023 அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரது 3 சவரன் தங்க நகை திருடு போயுள்ளது.


 அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் வானமாமலை (35) என்பவர் கடந்த 26.01.2023 அன்று திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருடி போயுள்ளது.


 மேலும் சாத்தான்குளம் இடைச்சிவிளையைச் சேர்ந்த காசி மகன் முத்துக்குமார் (25) என்பவர் கடந்த 26.01.2023 திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருடு போய் உள்ளது.


இதுகுறித்து மேற்படி மல்லிகா, வானமாமலை மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நகை திருடு போனதாக அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கனகாபாய் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் தலைமையிலான திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீசாருக்கு சம்பந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.


மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி பாலபாக்கிய நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி ராமலட்சுமி (எ) பேச்சியம்மாள் (60) மற்றும் திருநெல்வேலி குமரேசன் காலனி சேர்ந்த சண்முகம் மனைவி கல்யாணி (எ) கலா (49) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி தங்க நகை  திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

ராமலட்சுமி என்ற பேச்சியம்மாள் 

கல்யாணி என்ற கலா


 உடனே மேற்படி போலீசார் எதிரிகளான ராமலட்சுமி (எ) பேச்சியம்மாள் மற்றும் கல்யாணி (எ) கலா ஆகிய இருவரையும் கைது செய்து அவகளிடமிருந்த ரூபாய் 1,70,000/- மதிப்புள்ள 5½ சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். 


மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராமலெட்சுமி (எ) பேச்சியம்மாள் மீது திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், தென்காசி காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என 17 வழக்குகளும், மற்றொரு எதிரி கல்யாணி (எ) கலா மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், களக்காடு காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக