புதன், 1 பிப்ரவரி, 2023

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பொட்டல் காடு கிராமத்தில் பள்ளி கட்டியிடம் அடிக்கல் நாட்டப்பட்டது.

thoothukudileaks 1-2-2023

photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடி மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பொட்டல் காடு கிராமத்தில் பள்ளி கட்டியிடம் அடிக்கல் நாட்டப்பட்டது. 



இதுபற்றிய செய்தியாவது -

தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், முள்ளக்காடு ஊராட்சி, பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 புதிய வகுப்பறைகள் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்காடு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர்   அடிக்கல் நாட்டினார்்்்



தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜஸ்டினியன் மரியா முன்னிலையில்  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.  

நிகழ்ச்சியில் பொறியாளர் தளவாய், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி, மரிய ஜெயஷீலா, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செல்வி, மரிய ஜோஸ்பின், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் உட்பட அரசு துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிரேஸ் ஜெயந்தி ராஜகுமாரி நன்றியுரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவியர்கள் கையில் பூங்கொத்துடன் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக