தூத்துக்குடி மாவட்டம் :01.02.2023
by Police News
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் ஆட்டோவில் வந்து ஆடு திருடிய 3 நபர்கள் கைது - ரூபாய் 10,000/- மதிப்பிலான ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்தனர்.
இதுபற்றிய செய்தியாவது:-
மெஞ்ஞானபுரம் தைலாபுரத்தைச் சேர்ந்த அலிஷ் பிரபாகர் மனைவி ஏஞ்சலின் மேரி (33) என்பவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (31.01.2023) ஏஞ்சலின் மேரியின் ஆடுகள் அவரது வீட்டில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர்களான இருளப்பன் மகன் இசக்கிமுத்து (27), நாராயணன் மகன் முத்துக்குமார் (23) மற்றும் சிவா மகன் முத்தண்ணா (19) ஆகிய 3 பேரும் ஏஞ்சலின் மேரியின் ஆட்டை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏஞ்சலின் மேரி அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் வழக்குபதிவு செய்து எதிரிகளான இசக்கிமுத்து, முத்துகுமார் மற்றும் முத்தண்ணா ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 10,000/- மதிப்பிலான ஒரு ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக