தூத்துக்குடியில் இன்று 1-2-2023 நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலக பாமா தூத்துக்குடிக்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் பேசியதாவது -
தூத்துக்குடி மாநகராட்சி பொருத்தமட்டில் ஒழுங்காக எந்த வேலையும் எல்லா வேலைகளும் நடைபெறவில்லை போட்டது போட்டது போலவே கிடக்கின்றது
சாலை, பாதாள சாக்கடை வேலையை பொருத்தமட்டில் உண்மையிலேயே பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்து சரியானபடி திட்டமிடப்பட்டு வேலை செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொருத்தமோட்டில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் பணம் முழுமையாக வந்து சேரவில்லை வேலைகளும் முழுமையாக நடைபெறவில்லை
தூத்துக்குடி மாநகராட்சி பொருத்தமட்டில் இங்குள்ள தொழில் வளத்தை பார்க்கும் போது பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் .
ஆனால்? இங்கு ஒரு வேலையும் நடைபெறவில்லை
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய கொள்கையான மதுவிலக்கு கொள்கையில் தேர்தல் சமயத்தில் திமுகவினர் நாங்கள் வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான் என்று சொன்னார் .
சொன்னார்கள் மறந்து போய் சொல்லிவிட்டார்கள் போலும் தெரிகிறது ?....?!
மேலும் முக்கியமாக டாஸ்மாக் கடையில் மது அருந்தும் இடம் தற்போது ஏலம் எடுத்திருக்கின்றவர்கள் அரசுக்கு வங்கி வரையோலை மூலம் அரசுக்கு பணம் கட்டவில்லை எனவும் இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜிக்கு ரொக்கமாக கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழக அரசு இதனை உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும்
மத்திய அரசு இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அதில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை இன்னும் சொல்லப்போனால் வரி சுவை கூடி இருக்கிறது
சிகரெட் போன்ற பொருட்களுக்கு வரியை கூட்டி உள்ளனர் இது போன்ற விஷயங்களுக்கு நாங்கள் வரவேற்கின்றோம் மது மற்றும் போதைப் பொருட்களினுடைய விலையை கூட்டி அது கிடைப்பதையே அறியதாக்கி அதை இல்லாமல் ஆக்கி விட வேண்டும்
பட்ஜெட்டை பொருத்தமட்டில் இதுவரைக்கும் வந்த பட்ஜெட் தாக்கலில் மக்களுக்கான பட்ஜெட் ஆக இருக்கவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது பாரதிய ஜனதா கட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கை இந்த பட்ஜெட் பாஜகவை காப்பாற்றுமா என்பது இன்று மாலை வரை உள்ள நிதிநிலை அறிக்கை பொறுத்துதான் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்
பேட்டியின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சியோன் தங்கராஜ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக