சனி, 7 ஜனவரி, 2023

தட்டப்பாறை கிராமத்தில் மாட்டு வண்டி போட்டி அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு முன்னாள் அமைச்சர் சித.செல்லபாண்டியன் துவக்கி வைத்தார்.

 thoothukudileaks 7-1-2023

news & photo by Shanmuga Sundaram 

     தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்  தட்டப்பாறை கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டிபந்தயம் நடைபெற்றது. 




இந்த மாட்டு வண்டி பந்தயத்தை அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் சட்ட மன்ற எதிர் கட்சி பொருளாளர் மாவட்ட செயலாளர்  கடம்பூர் ராஜீ  எம்.எல்.ஏ கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

வரவேற்பு 


நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன். முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி,  பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன். கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், காசி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக