புதன், 7 டிசம்பர், 2022

மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறன்றிவு தேர்வில் வெற்றி வேப்பலோடை அரசு மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கள் பாராட்டு

 thoothukudileaks 7-12-2022

மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் தூத்துக்குடி மாவட்டம்,வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சத்தியா மற்றும்  சந்தோஷ் ஜெபராஜ்  ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.



இதுபற்றிய செய்தியாவது:-

      தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறன்றிவுத்தேர்வு நடைபெற்றது.. 


இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சத்தியா,மாணவன் சந்தோஷ் ஜெபராஜ் வெற்றி பெற்றுள்ளனர்.அதாவது  மாநில அளவில் ஆறாம் இடம் பிடித்துள்ளார்கள்.

மாநில தேர்வில் வெற்றி பெற்று வேப்ப லோடைஅரசு மேல் நிலை பள்ளிக்கு பெருமையை தேடித்தந்த மாணவி சத்தியா மாணவர் சந்தோஷ் ஜெபராஜ் இருவரையும் நேரில் வரவழைத்து 

 முதுகலை தமிழாசிரியை தேவி சந்தனமாரி , தலைமை ஆசிரியர் சேகர்,உதவி தலைமை ஆசிரியர் ஜாய் ப்ரியா,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் முனியசாமி,செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ்,உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜபாண்டி,புங்கராஜ்,கருப்பசாமி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் சத்தியா , ஜெபராஜ் இருவருக்கும் ரூ36 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக