தூத்துக்குடியில் பிரபலமான ஆத்தூர் மணி ஆரம்பித்த பிருந்தாவன் ஹோட்டல் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பால விநாயநகர் தெருவில் 27 ஆண்டாக செயல்பட்டு வருகிறது..
2022 டிசம்பர் 5 இன்று புதிய பொலிவு மெருகுடன் மேலடுக்கு புதிய கட்டடத்தில் தூத்துக்குடி பிருந்தாவன் ஹோட்டல் ( சைவம்) துவங்கியது
அதை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது.
இன்று புது பொலிவுடன் காலை 630 மணிக்கு ஆத்தூர் மணி மனைவி மாரியம்மாள் அவரது திருகரத்தால் குத்து விளக்கேற்றினார் பின்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் உபசரித்து நன்றி கூறினார்..
இந்நிகழ்ச்சியில் அடுத்து அவரது புதல்வர் தமிழ்செல்வன் தெரிவித்தாவது:-
தற்போது தூத்துக்குடி பிருந்தா பவன் அதி நவீன வசதி செய்துள்ளோம்
தனியாக குளிரூட்டபட்ட அறைகள் உண்டு
சாப்பிட குடும்பத்தோடு வரும் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதிகள் மற்றும் அவர்கள் அமர்ந்து செல்லவும் வசதி ஏற்படுத்தி தந்துள்ளோம் என்றார்.
தூத்துக்குடி பிருந்தாவன் ஹோட்டல் ஜி.எம். செல்வம் | வந்திருந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டிருந்தார்..
தூத்துக்குடி பிருந்தாவன் ஹோட்டலில் மக்கள் கூட்டம் தினமும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
News by அருணன் செய்தியாளர்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக