தூத்துக்குடி லீக்ஸ்: 06.07.2022
தூத்துக்குடியில் மாமனாரை குடும்பத் தகராறில் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் ஹரிஹரசுதன் (50) என்பவருக்கும் இவரது மருமகனான தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் இசக்கிமாரி (22) என்பவருக்கும் இடையே கடந்த 04.06.2022 அன்று குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட து.
தகராறில் ஆத்திரமடைந்த மருமகன் இசக்கிமாரி மாமனார் ஹரிஹரசுதனை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாமானார் ஹரிஹரசுதன் நேற்று (05.07.2022) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து மருமகன் இசக்கிமாரியை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக