தூத்துக்குடி லீக்ஸ்: 07.07.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக லயோலா இக்னேஷியஸ் இன்று (07.07.2022) பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவில் 3 வருடமும், அதற்கு முன்னதாக சென்னை பெருநகர காவல்துறையில் 5 வருடமும் பணியாற்றியுள்ளார்.
முன்பு ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டு ஆண்டுகள் காவல் ஆய்வாளராகவும், விளாத்திகுளம் மற்றும் திருச்செந்தூரில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக