வியாழன், 21 ஜூலை, 2022

தூத்துக்குடி அமமுக நிர்வாகி கட்சி விட்டு விலகி முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இனைந்தார்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அமமுக வர்த்தக அணி நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி லீக்ஸ் 2022 ஜூலை 21

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நியமிக்கப்பட்டது முதல் அதிமுகவினர் மிகுந்த உற்சாகத்திலஇருந்து வருகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக வர்த்தக அணி துணை தலைவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதனை தூத்துக்குடி டூவிபுரம் ஏழாவது தெருவில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று சந்தித்து சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தார். 



இந்நிகழ்வின் போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா. ஹென்றி, பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, கே.ஜே. பிரபாகர், பில்லா விக்னேஷ், நடராஜன், மாவட்டக் கழக துணை செயலாளர் சந்தனம், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேடிசி ஆறுமுகம், கேடிசி லட்சுமணன், வட்டக் கழக செயலாளர்கள் மனுவேல் ராஜ், ஜெயக்குமார், சொக்கலிங்கம், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், மற்றும் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், சாம்ராஜ், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், ஆனந்த், சுப்பிரமணியன், பொன்சிங், தாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக