அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகை சீலை அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
அதிமுக தொண்டர்கள் தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் எஸ்பிசண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
இதுபற்றிய செய்தியாவது
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழக அரசு அலுவலகத்திற்கு ஜூலை 11ம் நாள் சீல் வைத்தது.
அதனை அகற்ற கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதன் மீதான விசாரணையில் 2022 ஜூலை 20 மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதி அரசர் சதீஷ்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அதன் மீது தீர்ப்பளித்த நீதி அரசர் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை எடப்பாடி.பழனிசாமி இடம் ஒப்படைக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் அதிமுக தொண்டர்கள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் அதிமுக மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெரு ஜெயராஜ் ரோடு சந்திப்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அடுத்து தூத்துக்குடி பழைய பேரூந்து நிலைய வாயிலிலும் பட்டாசு வெடித்து, எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலளார்கள் மாநகராட்சி கவுன்சிலர் வக்கீல் வீரபாகு, நடராஜன், டேக் ராஜா, பிரபாகர், பில்லா விக்னேஷ், ஜெ.தனராஜ், சுதர்சன்ராஜா, அருண்ஜெபக்குமார், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன்,
மண்டல துணைத் தலைவர்பார்வதி, தூத்துக்குடி நகரக் கிளை இணைச் செயலாளர்தொப்பை கணபதி,புறநகர் கிளைச் செயலாளர்ஹரிராமன்,திருச்செந்தூர் கிளை பொருளாளர் அய்யபெருமன்,
முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகன்டன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், ஜோதிமணி, இளைஞரணி வலசை வெயிலுமுத்து, திருச்சிற்றம்பலம், ஜோஸ்வா அன்புபாலன், வக்கீல் முனியசாமி, டைகர் சிவா, ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், சுரேஷ், ஏ.கே.மைதீன், ஆனந்தராஜ், வெங்கடேஷ், சுந்தரேஸ்வரன், பரிபூரனராஜா, மாமன்ற உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், சந்திராபென்ராஜ், முத்துமதி, சந்திராசெல்லப்பா, மனோகரன், டேவிட்ஏசுவடியான், நிர்வாகிகள் மாரியப்பன், முத்துகணி, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சந்தனராஜ், பிசி மணி, விஜயன், வட்டக் கழக செயலாளர்கள் ஜனார்த்தனன், ராமச்சந்திரன், கொம்பையா, அருண் ஜெயகுமார், சொக்கலிங்கம், ராஜன், எஸ்கே முருகன், உதயசூரியன், நவ்சாத், ஜெயக்குமார், ஜெகதிஸ்வரன், ஈஸ்வரண், அருன்ராஜா, மணிகண்டன், பிரபாகரன், உலகநாதபெருமாள், பூரணச்சந்திரன், செல்வராஜ், பழனிச்சாமி பாண்டியன், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், அலெக்ஸ்அபிரகாம், சங்கரநாராயணன், சகாயராஜா, நிலா சந்திரன், தீனா வசந்த், இளையராஜா, யுவன் பாலா, சுப்பிரமணியன், சரவணவேல், பொன்னம்பலம் மகளிர்கள் சண்முகத்தாய், இந்திரா, அண்ணபாக்கியம், ஷாலினி, ஸ்மைலா உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக